அடிக்கு மேல் அடி: கதறும் மாஜி அமைச்சர் வேலுமணி

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கில் விசாரணை முடியும் வரை நிரந்தர வைப்பீடுகளை முடக்கக் கோரி லஞ்ச ஒழிப்பு துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
அடிக்கு மேல் அடி: கதறும் மாஜி அமைச்சர் வேலுமணி

லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றமும், நிரந்தர வைப்புத் தொகைகளை முடக்கி உத்தரவிட்டது. நிரந்தர வைப்பீடுகள் மீதான முடக்கத்தை நீக்க கோரிய மனுக்களை, நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, நிரந்தர வைப்பீடுகளை முடக்கக் கோரி, லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஜே.ஓம்பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்த போது, குற்றவியல் நடைமுறைப்படி மனுத்தாக்கல் செய்யப்படவில்லை என எதிர்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குற்றவியல் நடைமுறைப்படி கூடுதல் மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 5ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதி, அதுவரை சொத்துக்களை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com