மாநிலங்களவைத் தேர்தல்… திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மாநிலங்களவைத் தேர்தல்… திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!!

தமிழகத்தில் 6 மாநிலங்களவை இடங்கள் உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினா்களின் பதவிக் காலம், வரும் ஜூன் மாதம் 21ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் வெவ்வேறு நாள்களில் நிறைவடைகிறது.

இதையடுத்து 57 இடங்களுக்கு ஜூன் மாதம் 10ம் தேதி தோ்தல் நடத்தப்படும் என்றும், ஜூன் மாதம் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படும், தோ்தலுக்கான அறிவிக்கை மே 24ம் தேதி வெளியிடப்பட்டு, வழக்கம்போல், வாக்குப்பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இதையடுத்து தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் பெயரை கட்சியின் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, திமுக வேட்பாளர்களாக தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கான 4 இடங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுவரை காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இதனிடையே தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மனு தாக்கல் செய்ய மே 31ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். திமுக வேட்பாளர்களான தஞ்சாவூர் சு.கல்யாணசுந்தரம், இரா. கிரிராஜன், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனுவாசனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com