மறைமுகத்தேர்தல் நடத்துவது பற்றி மாநிலதேர்தல் பழனிகுமார் ஆலோசனை

காலியாக உள்ள பதவிகளை நிரப்ப மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.
மறைமுகத்தேர்தல் நடத்துவது பற்றி மாநிலதேர்தல்  பழனிகுமார் ஆலோசனை

தமிழகத்தி அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சிதேர்தலில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் சேர்மன், துணை சேர்மன், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. இதனால் காலியாக உள்ள சேர்மன், துணை சேர்மன், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை நிரப்ப வரும் 26-ல் மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் 26-ம் தேதி மறைமுகத் தேர்தலை பாதுகாப்புடன் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்களுடன் காணொலி வாயிலாக மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள ஆடுதுறை பேரூராட்சி தலைவர் & துணைத் தலைவர் தேர்தலை அமைதியாக நடத்தி முடிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் வரும் 30, 31 தேதிகளில் நடைபெற உள்ள நிலைக்குழு உறுப்பினர், வார்டு குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலையும் உரிய ஏற்பாடுகளுடன் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தேர்தலின் போது, சிசிடிவி கண்காணிப்புடனும், உரிய பாதுகாப்புடனும் மறைமுகத் தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com