ஈழ தமிழர்களின் நலன்களுக்காக மோடியை சந்தித்து பேசவும் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில் , ஈழ தமிழர்க்கு விடியல் எனும் தலைப்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
இதில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்உள்ளிட்டோர் பங்கேற்று ஈழ தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மேடையில் பேசிய வைகோ,
இலங்கைக்கு இன்று இந்தியா உதவுகிறது ஆனால், 2009 ஆம் ஆண்டு 1.5 லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது, இந்திய அரசு அதை ரசித்ததா, இந்திய அரசுக்கு மனசாட்சி இல்லையா என கேள்வி எழுப்பினார்.
இலங்கையில் யார் அதிபராக வந்தாலும் ஈழ தமிழர்களுக்கு அவர்கள் விரோதமாகவே இருப்பார்கள் என குற்றம் சாட்டினார்.
வேலுப்பிள்ளை பிரபாகரன் தனக்கு எழுதிய கடிதத்தை தம் வாழ் நாளில் கிடைத்த மிக சிறந்த பரிசாக கருதுவதாக தெரிவித்தார்.