சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டப்பட்டது.
சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம்

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக்கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி, காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எங்களுடைய மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த சகாக்கள் நான்கு பேர் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். அவர்கள் தங்களுடைய பதவி காலங்களில் நிறைய பங்களித்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் அனைவரும் அரசியல் வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தொடர்ந்து பணியாற்றுவார்கள் என நான் நம்புகிறேன். நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடரில் பட்ஜெட் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடைபெற்றது. இரு அவைகளிலும் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக முக்கிய பிரச்சினைகளை எழுப்பி இருந்தார்கள். ஆனால் அரசாங்கத்தின் அணுகுமுறை மாறவில்லை. 

விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு இதுவரை நிறைவேற்றவில்லை.

பெட்ரோல்-டீசல், எரிவாயு சிலிண்டர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்து வருகின்றன. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. எல்லைப்பிரச்சனை குறித்து மத்திய அரசு விவாதிக்கவில்லை. உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் விரைவில் உறுதி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து கடந்த மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

வேலையின்மை மற்றும் வாழ்வாதார பாதுகாப்பு இன்மை அதிகரித்து வரும் நேரத்தில் தொழிலாளர் சட்டங்கள் நீர்த்துப்போகின்றன. பணியாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு சொத்து பணம் என்ற பெயரில் விற்பனை செய்கின்றன கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் கூடியது. அப்போது கட்சி விவகாரம் குறித்து மூத்த தலைவர்களுடன் விவாதிக்கப்பட்டது தொடர்ச்சியாக கட்சிகள் பல்வேறு மாறுபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com