விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை... காங். நூதன போராட்டம்!!

விண்ணை முட்டும் பெட்ரோல், டீசல் விலை... காங். நூதன போராட்டம்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் முன்பு தென்சென்னை காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெட்ரோல்,டீசல், கேஸ், விலை உயர்வை மத்திய அரசை கண்டித்து பிச்சை எடுத்தும், கேஸ் சிலிண்டரை பிணம்போல் இறுதி சடங்கு செய்து பாடையில் எடுத்துச் செல்லும் நூதன போராட்டம் நடைபெற்றது. கட்சியின் பொருளாளர் ஜோதிபொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தென்சென்னை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பொருளாளர் பொன்னம்பலம், தொடர்ந்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருகிறது. நாளுக்கு நாள் பெட்ரோல்-டீசல் விலைவும் அதிகரித்து இருந்தால் சாமானிய மக்களின் தேவைகளுக்கான பொருட்களும் விலை உயர்ந்து வருகிறது.

இதனால் பொதுமக்கள் எந்த பொருட்களும் வாங்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. விலை ஏற்றத்தை குறைக்கவில்லை என்றால் மத்திய அரசை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com