பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நூலை வெளியிட தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பெற்றுக்கொண்டார். பூச்சி முருகன்,சிற்றரசு,கவிஞர் மனுஷ்யபுத்திரன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் முதலமைச்சர் மீது உள்ள பாசத்தின் காரணமாக நூலாசிரியர் சிவா இந்த நூலை வெளியிட்டுள்ளார்.கட்சித் தலைமை மீது விசுவாசம் அதிகம் உள்ள மாவட்டம் எது வென்றால் அது சேலம் மாவட்டம் தான்.
எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் மூத்த தலைவர்களாக இருந்தாலும் அனைவராலும் பாராட்டப்படுகிற தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருப்பதாக குறிப்பிட்டார். உதயநிதி ஆற்றி வரும் பணிகள் குறித்தும் ஒரு நூல் வெளியிட வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாக அமைச்சர் தெரிவித்தார்.