15 மாநிலங்களில் 57 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் : வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்குகிறது.
15 மாநிலங்களில் 57 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் : வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடக்கம்

தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் 57 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிகாலம் நிறைவடையவுள்ளது. அதில், தமிழகத்தில் மட்டும் 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜுன் மாத இறுதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, காலியாகும் ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கு வரும் ஜுன் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி, இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி வரும் 31 ஆம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களில், திமுக கூட்டணி 4 இடங்களிலும், அதிமுக 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. திமுக சார்பில் 3 இடங்களுக்கான வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டனர்.

அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இடத்திற்கு இன்னும் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. எனினும், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், அதிமுக சார்பில் போட்டியிடும் 2 வேட்பாளர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பும் ஓரிரு நாளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com