மாஜி அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் ரெய்டு

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மாஜி அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீடு உட்பட 58 இடங்களில் ரெய்டு

கோவையில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மீண்டும் சோதனை நடைபெற்று வருகிறது.

எஸ். பி. வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரூ 58.23 கோடிக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி மற்றும் குடும்பத்தினர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தனர்.

எஸ். பி‌ வேலுமணியின் சகோதரர் அன்பரசன் என் வீடு, கடை, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

கோவை சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் எஸ். பி. வேலுமணிக்கு தொடர்புடைய நபர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது.

கோவையில் மட்டும் 41 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் மட்டும் 8 இடங்களில் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com