உத்திராகண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு

உத்திராகண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 6 மாதங்களுக்கு இடை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திராகண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி ஒருமனதாக தேர்வு

70 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரகண்ட் மாநிலத்தில் 47 இடங்களில் வெற்றி பெற்று பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இருப்பினும் உத்தரகண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக உள்ள புஷ்கர் சிங் தாமி 'காதிமா' தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் புவன் சந்த் கப்ரியிடம் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்நிலையில் முதலமைச்சர் யார்? என்பதை தேர்ந்தெடுப்பதில் பெரும் சிக்கல் உட்கட்சிக்குள் நிலவியது! இந்நிலையில் நேற்றைய தினம் டெல்லியில் உத்தரகண்ட் மாநிலத்தில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, முன்னாள் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால், பாஜக தலைவர் ஜேபி நட்டா, பி.எல்.சந்தோஷ், உத்தரகாண்ட் அமைச்சர் சத்பால் மகராஜ் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை அவரது இல்லத்தில் சந்தித்து நீண்டநேரம் ஆலோசனை நடத்தினர்.

நடைபெற்ற ஆலோசனையில் புதிய முதலமைச்சர்களின் பெயர்கள் பரிந்துரை என்பதைவிட ஏற்கனவே முதலமைச்சராக உள்ள புஷ்கர் சிங் தாமி-க்கு மீண்டும் முதலமைச்சர் வாய்ப்பு வழங்க ஆலோசிக்கபட்டதாக கூறப்படுகிறது. காரணம் புஷ்கர் சிங் தாமிக்கு ஆதரவாக இப்பொதுவரை 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்துள்ள நிலையில் அதில் ஏதேனும் ஒரு இடத்தில் அடுத்த 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தி புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றால் தொடர்ந்து முதலமைச்சராக நீடிக்க முடியும் என பாஜக தலைமை முடிவு எடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் டேராடூனில் நடைபெற்றது; அதில் உத்திராகண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தொடர் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது; மேலும் வரும் நாட்களில் ஏதேனும் ஒரு தொகுதியில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வதை அடுத்து அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் புஷ்கர் சிங் தாமி போட்டியிட உள்ளார் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாஜக-வின் உத்திராகண்ட் பார்வையாளர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும், தன் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட ராஜ்நாத் சிங் அவரது தலைமையில் உத்தரகண்ட் மாநிலம் விரைவான முன்னேற்றம் அடையும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com