தொழிலாளர் தினத்தை கொண்டாடிய பெருமை சென்னையை சேரும்...

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

மே தினத்தை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் செங்கொடியை மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்தியநாட்டில் முதல் முறை தொழிலாளர் தினத்தை கொண்டாடிய பெருமை சென்னையை சேரும் என்று கூறினார்.

மோடி ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பணத்தை வாரி வழங்கி கொண்டிருக்கிறது மேலும் பல சலுகைகளையும் வழங்கி கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்கிறார்கள். தனியாருக்கு இந்தியாவின் பொதுத்துறையை அடிமாட்டு விலைக்கு விற்று வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் மக்கள் மத்தியில் மதவெறியை தூண்டி விடுகிறார்கள். சிறுபான்மை மக்கள் மீது மிக பெரிய தாக்குதலை நடத்தி வருகிறார்கள். மத ஒற்றுமையை சீரழிக்கும் மோடி அரசை விரட்ட வேண்டும் என சுளுரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.

அகில இந்திய போட்டி தேர்வுகளை அந்தந்த மாநிலங்களில் எழுத வேண்டுமே தவிர பிற மணியங்களில் சென்று எழுத கூடாது. அப்படி சென்றால் மன அழுத்தங்கள் தான் ஏற்படும் எனவும் நீண்ட காலமாக அனைத்துக் கட்சிகளும் கூறிய கோரிக்கை இன்று தான் அவருக்கு உரைத்து இருக்கிறது. அதனை கூறினால் மட்டும் போதாது நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com