அமித்ஷாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு... கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது எதிர்க்கட்சிகள்!!

அமித்ஷா புதுச்சேரிக்கு வரும் போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எதிர்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளது.
அமித்ஷா
அமித்ஷா

தமிழை புறக்கணித்து ஹிந்தி கட்டாயம் என்று அறிவித்து தமிழர்களுக்கு அமித்ஷா துரோகம் இழைத்துள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் நிதி நெருக்கடியை தீர்ப்போம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்த அமித்ஷா அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

புதுச்சேரி மாநிலத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, கடன் தள்ளுபடி செய்யவில்லை, மேலும் அனைத்து கட்சிகளால் நீண்ட காலமாக கோரிவரும் மாநில அந்தஸ்து தர அமித்ஷா மறுத்து வரும் நிலையில்

வரும் 24ம் தேதி புதுச்சேரிக்கு வரும் அமித்ஷாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமித்ஷா திரும்பி செல்ல வழியுறுத்தி கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட எதிர்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து அறிவித்துள்ளன.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com