மருத்துவர் இல்லாதவர்கள் மருந்து மாத்திரைகளை விற்பனை

மருத்துவர் இல்லாதவர்கள் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்
மருத்துவர் இல்லாதவர்கள் மருந்து மாத்திரைகளை விற்பனை

சென்னை அரசு மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் மருத்துவமனையில் புதிய CEMONC என்கிற குழந்தைகளுக்கான அவசர பிரிவு, திரவ நிலை மருத்துவ பிராணவாயு கொள்கலன் மற்றும் பச்சிளம் குழந்தைகள் நல வாழ்வு மையத்தையும், ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவைகளை அமைச்சர் மா.சுப்ரமணியம் துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியம், ஆண்கள் உடன் செல்வதாலேயே மேயர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றில்லை, பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் கட்சி திமுக எனது செய்தியாளர்கள் சந்திப்பில் கூட மேயர் மிக நன்றாக பதிலளித்தாக கூறினார்.

கன்னியாகுமரியை சேர்ந்த மருத்துவர் பெமினா விவகாரம் தொடர்பாக விசாரணை மேற் கொண்டதில், விசாரணையின் போது அவர் மருத்துவ அதிகாரியாக ஜோடியை குறிப்பிட்டு இருக்கக்கூடிய செயலில் கடந்த ஆண்டு பணிமாற்றம் செய்து கடந்த நான்கு ஆண்டுகளாகவே ஆகிவிட்டது.ஆனால் அதை நேற்று நடந்தது போல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப என்பது மிகவும் தவறான செய்தி என்றார்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக தொடர் பணி செய்வதால் மருத்துவர்கள் மன உளைச்சலில் இருப்பது உண்மைதான் ஆனால் ஊடகத்தில் ஒரு செய்தியை ஆராய்ந்து உண்மை என அறிந்த பின்னரே செய்தியை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

மருத்துவர்கள் பணியிட மாற்றம் என்பது அலுவலகம் ரீதியாக நடைபெறக்கூடிய ஒரு நடவடிக்கையே தவிர்த்து மற்ற எதுவும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவும் என்ற அவர் மருத்துவர் இல்லாதவர்கள் மருந்து மாத்திரைகளை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com