தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது... ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது... ஜெயக்குமார் குற்றச்சாட்டு!!

தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரூ.5 கோடி நில அபகரிப்பு வழக்கில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைக்கு மட்டுமே இடம். மும்மொழிக் கொள்கைக்கு அனுமதி இல்லை. உலகத்தின் முன்னோடி மொழியாக தமிழ் இருக்க தமிழகத்தில் இந்தி மொழியை எந்தவிதத்திலும் நுழைய விடமாட்டோம். ஏ.ஆர் ரகுமானின் தமிழே இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது

திமுக ஆட்சியில் பேசப்படும் திராவிட மாடல் மக்களை ஏமாற்றும் செயல். உள்ளாட்சி பிரதிநிதிகளின் அட்டகாசத்தால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் வெளிப்படை தன்மையுடன் இருந்த டெண்டர், திமுக ஆட்சியில் திமுகவினருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. கரூரில் போடாத சாலைகளுக்கு ஒப்பந்தம் போடப்படிருக்கிறது. குறிப்பிட்ட நபர்களுக்கே அனைத்து டெண்டர்களும் வழங்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். சசிகலா வழக்கு தொடர்பான கேள்விக்கு, அதிமுகவை பொறுத்தவரை சிறப்பான வாதங்களை எடுத்து வைத்திருக்கிறது. தீர்ப்பு சாதகமாக இருக்கும் என நம்புகிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com