அண்ணாமலை செங்கோட்டையை முற்றுகையிட்டால் பொருத்தமாக இருக்கும்....

அண்ணாமலை செங்கோட்டையை முற்றுகையிட்டால்  பொருத்தமாக இருக்கும்....

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று அண்ணாமலை தலைமை செயலகத்தை முற்றுகையிடுவதை விட டெல்லியில் உள்ள செங்கோட்டையை முற்றுகையிட்டால் பொருத்தமாக இருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

மோடி அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், மக்கள் விரோத போக்கை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( எம் எல்) ஆகிய கட்சிகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ(எம்.எல்.)மாநில செயலாளர் என். கே.நடராஜன் ஆகியோர் தலைமையேற்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்ரினர்.

பெட்ரோல் டீசல் கேஸ் பொருட்கள் மீதான வரிகளை கைவிட வேண்டும், பருப்பு எண்ணெய் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ரேஷன் கடைகளில் வழங்கிட வேண்டும் என்றும் வருமான வரி வரம்பை எட்டாத அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ரூபாய் 7,500 வழங்கிட வேண்டும் என்றும் நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

அரசுத் துறையில் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு இடையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, பேசிய திருமாவளவன்

தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com