மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது நியாயமற்றது… இளையராஜாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம்!!

மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை ரத்து செய்யக் கோரியும் , இந்தி மொழி திணிப்பை கைவிட கோரியும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன், ஒரே நாடு, ஒரே தேசம் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்தி மற்றும் சமஸ்கிருத இந்தியா முழுவதும் படிபடியாக எடுத்து வரும் நடவடிக்கையில் அமித்ஷா ஈடுபட்டு வருகிறார்.

மேலும் இந்தி அலுவல் மொழியாக இருக்க வேண்டும் எனவும் இரண்டு நபர்கள் இந்தியில் பேச வேண்டும் எனவும் கூறியிருக்கிறார். 8 மாநில பள்ளிகளில் கட்டாய இந்தி இருக்க வேண்டும் அதற்காக 12,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியை தாய்மொழியாக ஏற்றவர்கள் 26 சதவீதம் மக்கள் மட்டுமே. இதில் 74 சதவீத மக்கள் மற்ற மொழிகளை தாய் மொழியை கொண்டவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. மற்ற மொழிகளில் இந்தி கலந்த பேசுவதால் 43% இந்தி பேசுகிறார்கள் என்று சொல்கிறார்கள்.

தொடர்ந்து இதுபோன்ற இந்தி திணிப்பை கண்டித்து இந்தப்போராட்டம் நடைபெற்றது. தற்போது படிபடியாக பல்வேறு துறைகளில் நுழைவு தேர்வுகள் வைக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் தனியார் கோச்சிங் சென்டர்கள் அதிக வருவாய் ஈட்ட வேண்டும் என்பதற்காக தான்.

இதுபோன்ற பல்வேறு நுழைவுத்தேர்வில் கொண்டு வந்தால் அடித்தட்டு மக்கள், பட்டியலினம் மக்கள் கல்வி கல்லூரி வாசல் மிதிப்பதற்கு கடினமாக இருக்கும். தமிழக முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி நீட் தேர்வு ரத்து செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்.

இளையராஜா இசையில் போட்டிபோடுவதற்கு யாரும் இல்லை அது மகிழ்ச்சிதான். ஆனால் அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது பொறுப்பற்றது, நியாயமற்றது, நேர்மையற்றது. அவர் அரசியல் நோக்கத்தோடு பேசுவதாக நான் நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com