எஸ் பி வேலுமணி ஊழல் செய்திருப்பது உறுதியாகியுள்ளது...

எஸ் பி வேலுமணி ஊழல் செய்திருப்பது உறுதியாகியுள்ளது...

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக 400 கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது அறப்போர் இயக்க ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது என அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது ஏற்கனவே பல்வேறு ஊழல் புகார் குற்றச்சாட்டுகள் அளிக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர மாநகராட்சியில் விதிகளை மீறி பேருந்து நிறுத்தம் அமைப்பது தொடர்பாக 400 கோடி ரூபாய் டெண்டர் போலி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது நிரூபணமாகி உள்ளது எனவும் மேலும் கருப்பு பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெள்ளை பணமாக்கி மீண்டும் கருப்பு பணமாக்கபட்டுள்ளது.

2016 , 2017 , 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ள இந்த டெண்டர் முறைகேட்டு ஊழலில் துணைபோன தொடர்புடைய அரசு அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்த ஆதரங்களை தற்போது திரட்டி உள்ளோம், மேலும் இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை சென்னை மாநகராட்சி ஆணையருக்கு புகார் தெரிவிக்க உள்ளோம் என்றார்.

பேருந்து நிறுத்தம் அமைப்பதில் முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் தற்போது அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும் எனவும் இதன் மூலம் அரசுக்கு 200 கோடி வருவாய் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com