
சென்னை திருவான்மியூரில் நடைபெற்று வரும் பொன் குமார் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டனர். மணமக்களை ஆசீர்வதித்த பின் திருமண நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,
சீர்திருத்தத் திருமணம் சுயமரியாதை உணர்வோடு இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது, இது போன்ற திருமணங்கள் 1960 முன்பு நடைபெற்றிருந்தால் அது செல்லுபடியாகாது என்ற நிலையில்தான் நடைபெற்றது என்றார்.
1967 ஆம் ஆண்டு திமுக ஆட்சி வெற்றி பெற்று அண்ணா முதல்வரான பிறகு அவரால் கொண்டு வந்த தீர்மானங்களில் ஒன்று சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் செல்லுபடியாகும் என்ற தீர்மானம். இன்று நடந்து இருக்கும் திருமணம் சட்டபடி செல்லும்.
இது ஒரு தமிழ் திருமணம், தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று கொடுத்தவர் கருணாநிதி என்பதை இந்த நாடு மறந்து இருக்காது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கூட்டணி கட்சி தலைவர்கள் பல கோரிக்கை வைத்து அதற்கு முதல்வர் நல்ல முடிவு அளிப்பார் என்று தெரிவித்திருக்கிறார்கள் அது நியாயமாக இருந்தால் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களுக்கும் அந்த உணர்வு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தான் நடலுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி அமைப்புகளுக்குக்கான தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் ஆதரவு கொடுத்து இருக்கிறார் என்றார்.
இங்கு கூட்டணி கட்சி சில கோரிக்கையை வைத்தார்கள் அதை நான் நிச்சயமாக கருணாநிதி வழியில் நின்று அவர் என்னென்ன சாதிக்க வேண்டும் என்று நினைத்தாரோ அதை எல்லாம் அவர் வழியில் நின்று நானும் சாதிப்பேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.