எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு?-அறிக்கை வெளியிடப்படும்

எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு?-அறிக்கை வெளியிடப்படும்

இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.100 கோடி நிதி எந்தெந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து செவ்வாய் அல்லது புதன்கிழமை அறிக்கை வாயிலாக வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில், 98வது வட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் பிரியதர்ஷினி அலுவலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்,98 வது வார்டில் வெற்றி பெற்ற இளம் வேட்பாளர் பிரியதர்ஷினிக்கு வாழ்த்துகள் என்றும், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் இப்போது பெற்ற வாக்குகளை விட 40% அதிகமாக பெற வேண்டும் என்கிற அடிப்படையில் அனைவரும் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் அனைத்து மாநகராட்சி உறுப்பினர்களும் இணைத்து சென்னையை சிங்கர சென்னையாக மாற்ற உழைக்க வேண்டும் என்றார்.

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 100 கோடி ரூபாய் எந்த எந்த திட்டங்களுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது, எந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்ய இருக்கிறோம் என்பது குறித்து செவ்வாய் கிழமை அல்லது புதன் கிழமைகளில் அறிக்கை வழங்க உள்ளோம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு அமைச்சர் பதில் அளித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com