அரசு கொடுத்த இடம் எப்படி ஆக்கிரமிப்பு ஆகும்… சீமான் கேள்வி!!

அரசு ஒதுக்கிய இடம் எப்படி ஆக்கிரமிப்பு நிலம் ஆகும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்
சீமான்
சீமான்

சென்னை அடையாறு ஆர்.ஏ.புரம் பகுதியில் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு இருந்த நிலையில் அதனை நேரில் பார்வையிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒரு வியாபரிக்கு பிரச்சனையாக இருக்கு என்று இந்த இடத்தை இடிக்கின்றனர். முதல்வர் மாற்று இடம் கொடுத்தாலும் இந்த இடத்திற்கு என்ன குறைச்சல்? இந்த இடம் ஆக்கிரமிப்பே கிடையாது. கோர்ட் நிறைய தீர்ப்பு கொடுக்கிறது.

தமிழக அரசு சார்பில் இந்த வழக்கை சரியாக பயன்படுத்தவில்லை. அரசு தானே இந்த இடத்தை ஒதுக்கி இந்த இடத்தை கொடுத்து உள்ளது. சாஸ்த்திரா பல்கலைக்கழகத்தின் நிலத்தை கோர்ட் உத்தரவு படி இடித்தார்களா? இங்கே கேட்க ஆள் இல்லை என்று இடிக்கிறார்களா? பாதி நீதிமன்றங்கள் நீரில் தான் கட்டப்பட்டு உள்ளது. இவ்வளவு காலமாக எல்லா உரிமையும் இந்த பகுதிமக்களுக்கு கொடுத்து விட்டு தற்பொழுது எப்படி மக்கள் இருக்கும் இடத்தை இடிப்பார்கள்.

வழக்கு தொடுத்த வியாபாரி நிலுமும் கபாலீஸ்வரர் கோவில் நிலம் என்று தெரிவிக்கிறார்கள். இதை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்ய வேண்டும். இவர்களுக்கு மாற்றாக பெருங்குடி ஈஞ்சம்பாக்கம் என்று கொடுப்பது ஏற்புடையது அல்ல. முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com