பேரறிவாளன் குற்றமற்றவர்… எப்படி? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்!!

பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் சட்டப்படி விடுதலை செய்து உள்ளதால் அவர் குற்றமற்றவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் குற்றமற்றவர்… எப்படி? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்!!

சி.பா. ஆதித்தனாரின் 41வது நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ் சமூகத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் செயல்பட்டு தமிழர்களுக்காகவும் தமிழ் மண்ணுக்காகவும் உழைத்தவர் சி.பா ஆதித்தனார்.

ஆனால் இப்போது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்க நினைக்கிறார்கள் அதற்கு எதிராக நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பேரறிவாளனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றதை பலரும் கண்டித்து வருகின்றர் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், உச்ச நீதிமன்றமே அவரை விடுதலை செய்துள்ளது. எனவே தான் முதல்வர் அவரை ஆரத்தழுவி வரவேற்றார் என்று தெரிவித்தார்.

மேலும் நீதிமன்றத்தில் அவரை நிரபராதி என குறிப்பிட வில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, அவர் குற்றவாளி எனவும் நீதிபதி தெரிவிக்கவில்லை. அதை நாம் நிரபராதி என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். அரசியல் காரணம் சொல்லி நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்யவில்லை சட்டப்படி விடுதலை செய்துள்ளதால் பேரறிவாளன் குற்றமற்றவர் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com