
சென்னை மாநகராட்சி 134-ல் வென்ற பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி மேற்குமாம்பலத்தில் நடைபெற்றது. இதில், பாஜக தலைவர் அண்ணாமாலை , எச்.ராஜா உட்பட ஏராளமானோர் பாஜகவினர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகளால் தொடர்ந்து மாணவர்கள் அழைத்து வரப்படுவதாகவும் இவ்வாறு இருக்க, தமிழக அரசு எம்பிக்கள் குழுவினரை அனுப்புவது தேவையற்றது எனக்கூறினார்.
மேலும் தமிழ்நாடு அரசு தனது அதிகார எல்லைக்குள் இருக்க வேண்டும் என விமர்சித்த அவர், 5 மாநில தேர்தல் பொறுத்தவரை போட்டி இருப்பது பஞ்சாப்பில் மட்டும் தான், மீதமுள்ள இடங்களில் எளிமையாக பாஜக வென்றுவிடும் என எச்.ராஜா தெரிவித்தார்.
மேலும், திமுகவினர் மற்றும் திராவிட ஸ்டாக்ஸ்கள் எப்போதும் மத்திய அரசை குறை கூறிக்கொண்டே இருப்பதாக தெரிவித்த எச்.ராஜா, உள்ளாட்சித் தேர்தலில் வென்றுள்ள பாஜகவினர் மற்ற கட்சியினர் போல் இல்லாமல் நேர்மையாக செயல்படுவார்கள் என்றார்.