இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடியை புகழ்ந்து பேசியதால் இளையராஜாவிற்கு விருது கொடுப்போம் என்கிறார்கள், அது அவரது தனிப்பட்ட கருத்து, அதற்காக இளையராஜாவை விமர்சிக்க வேண்டியதில்லை,
அவரை விட பெருமையாக நிறைய பேர் மோடியை பற்றிய் பேசி இருக்கிறார்கள். திராவிடனா இரு இல்லையென்றால் தமிழனா இரு? ஏன் குழப்பம்? தேவைப்பட்டால் இந்தியன் என்கிறீர்கள், தமிழன் என்கிறீர்கள், ஏன் இத்தனை முகமூடி? யுவன் சின்னப்பிள்ளை என்பதால் அவருக்கு புரிதல் இல்லை. கே.ஜி.எப் யாஷ் கூட பெருமைமிகு கன்னடிகா என்கிறார்.
அதே போல பெருமைமிகு தமிழன் என்று மட்டும் சொல்ல வேண்டியது தானே? கருப்பா இருந்தால் திராவிடர் என்றால் எருமை மாடு கூட கருப்பாக இருக்கிறது, எருமை திராவிடரா? உழைக்கும் மக்கள் நிறம் கருப்பாக தான் இருக்கும் என்று தெரிவித்தார்.