அப்போது,புதுச்சேரி காவல்துறை,கல்வித்துறை, தொழில்துறை மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பதிவு உயர்வு கொடுக்கப்பட்டு வருகிறது.காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகிறது என்றார்.மேலும் சாரய வடிகால் ஆலையில் 22 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை , மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒண்டன் பின் ஒன்றாக செயல்படுத்தி வருகிறோம் என்ற அவர்,
பிரதமர் கூறியது போல பெஸ்ட் புதுச்சேரியை நோக்கி அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது என்றார்.
ஜூன் 3 மற்றும் 4 ஆகிய 2 நாட்கள் புதுச்சேரியில் தொழில் முனைவர் மாநாடு நடத்த உள்ளோம்.
இந்திய மற்றும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
பல்வேறு முதலீட்டாளர்கள் புதுச்சேரியில் முதலீடு செய்ய தயாராக உள்ளனர். தொழில் செய்ய உகந்த மாநிலமாகவும் , வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றும் கல்லூரியில் மாணவிகள் மோதிக்கொண்ட விவகாரம் தொடர்பாக யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும், மாணவர்கள் மோதலை அரசு ஒரு போதும் அனுமதிக்காது என தொழில்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெய்வித்தார்