யாருக்கும் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடாது என்பது தான் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையாக உள்ளது என காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பயண பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
நீட் தேர்வு எதிர்ப்பு,தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பரப்புரைப் பயணக் பொதுக்கூட்டமானது கடந்த 3ஆம் தேதியன்று நாகர்கோவிலில் தொடங்கி 25ஆம் தேதி சென்னையில் முடிவடைகிறது. இந்நிலையில் இந்த பரப்புரைப் பயண பொதுக் கூட்டத்தின் 9ஆம் நாளான இன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் வீதியில் நடைபெற்றது.
இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பங்கேற்று நீட் தேர்வு எதிர்ப்பு, தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு,மாநில உரிமை மீட்பு பயணப் பரப்புரை நூலினை வெளியிட்டு சிறப்புரையாற்றி பேசுகையில்,
மாநில அரசு நேரடியாக மத்திய அரசை அணுக நேரம் இல்லதா காரணத்தினால் தான் டெல்லியில் இருந்து எஜெண்ட் (கவர்னர்) என்ற ஒரு நபரை நியமித்து உள்ளனர். அவர் தபால் காரர் வேலை மட்டும் தான் செய்ய வேண்டுமே தவிர அனுப்பும் தபால்களை பிரித்துப் பார்க்கும் வேலை செய்தால் அது அதிக பிரசங்கிதனமாக தான் உள்ளது.
நாம் அந்த தபால்காரரை என்ன செய்ய வேண்டும், அவரை திரும்பி போகின்ற நேரம் வரும். இது அரசியல் சட்டத்தில் உள்ளது.ஆகையால் அரசியல் சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை நிறைவேற்ற வேண்டும், மாநில உரிமைகளை இவர்கள் பிரிக்கின்றார்கள், மத்தியில் இருப்பவர்கள் இங்கு ஆட்சிக்கு வர முடியாத காரணத்தால் இந்த ஆட்சிக்கு நல்ல பெயர் வந்து விடக் கூடாது என்பதற்காக குறுக்கு வழியில் இவ்வாறு செய்கிறார்கள்.
ஆட்சிகள் மாறலாம் ஆனால் அடிப்படை தத்துவங்கள் ஒன்றுதான். பள்ளியில் மதிய, உணவு, புதக்கம், செருப்பு,சீருடை என இவையெல்லாம் கொடுத்து மாணவர்களை படி படி என கொள்கை வைத்தால், மத்திய அரசு இவர்களை படிக்காதே என்பதனை தான் கொள்கையாக வைத்துள்ளது.
மத்திய அரசு வைத்துள்ள தேசிய கல்வி கொள்கையான நேஷனல் எஜிக்கேசன் பாலிசியை NEC) சரியாக பார்த்தல் நோ எஜிக்கேசன் பாலிசி என்பதைப்போல் தான் உள்ளது. யாருக்கும் கல்வியை கற்றுக் கொடுக்கக் கூடாது என்பது தான் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையாக உள்ளது என மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்.
இந்நிகழ்வில் திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும்உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவிஎம்பி. எழிலரசன், மதிமுக மாநில துணைப் பொது செயலாளர் மல்லை சத்யா என தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., வி.சி.க., தி.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.