இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் திருச்சி மேல சிந்தாமணியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாய சங்கங்களின் சார்பில் பிஆர் பாண்டியன் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள், மற்றும் பல்வேறு மாவட்டத்திலிருந்து அ.ம.மு.க.கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
போராட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன், திராவிட மாடல் என்று சொல்லும் திமுக அரசு, வழக்கம் போல் வசனம் பேசி ஏமாற்றாமல் முழு கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். திராவிட மாடல் ஆட்சியா? அல்லது தில்லு முல்லு ஆட்சியா? என்பது போல் யோசிக்க வைக்காமல் திமுக அரசு செயல்பட வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.