
சென்னை இராயபுரம் காவல் நிலையத்தில் நான்காவது நாளாக நிபந்தனை கையெழுத்திட பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவின் பெண் கவுன்சிலரின் கணவர் காவலர்களை கொச்சையான வார்த்தையில் திட்டுயதற்காக திமுக சார்பில் அவரை கட்சி பதவியிலிருந்து பணியிடை நீக்கம் செய்தது கண்துடைப்புக்கான செயல் மட்டுமே என்றார்.
மேலும் திமுக தலைவரின் பேச்சை கட்சி நிர்வாகிகளை கேட்பதில்லை என்பதற்கான உதாரணம் தான் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கீடு செய்த இடங்களை திமுகவினவரே நின்று வெற்றி பெற்றது என்ற ஆர், திமுக எப்போதும் இரட்டை குதிரையில் பயணம் செய்பவர்கள் என்றும் பிஜேபிக்கு வேலை செய்ய ஒருவர் பின் ஒருவராக வரிசை காவடி எடுப்பது போல் திமுகவினர் டெல்லி சென்று கொண்டு வருகின்றனர் என்றும், கடந்த 10 மாதத்தில் திமுக ஆட்சியில் குடும்பத்தினர் செய்த ஊழலில் இருந்து தங்களை காப்பாற்றி கொள்ள டெல்லி சென்று செய்த தவறுக்கு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க சென்றுள்ளனர் என்றார்.
அதேபோல் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது குறித்த கேள்விக்கு , தமிழக அரசு இதற்கான வாதத்தை சீராக எடுத்து வைக்காத நிலையோ மட்டுமே காரணம் என்று கூறினார்.