திமுக எதையும் சரியாக செய்யவில்லை... ஜி.கே.வாசன் விமர்சனம்!!

தமிழகத்தில் மின்வெட்டு என்பது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் படிப்பை மிகப்பெரிய அளவில் பாதிப்பு உண்டாகும் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
ஜி.கே.வாசன்
ஜி.கே.வாசன்

சென்னை தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.வாசன், தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின்வெட்டு உயர்வு, அரசு திட்டங்களில் தாமதம் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை காரணம் கூறுவது ஆளும் திமுக அரசின் இயலாமையை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்தின் செலவு பொதுமக்களின் வரிப்பணத்தை திணிக்கக் கூடிய வீண் செலவு என்று கூற விரும்புகிறேன். தமிழகத்தில் தேவையான மின்சாரத்தை மத்திய அரசு தொடர்ந்து கொடுத்து வருகிறது.

அதை மத்திய அரசு உறுதி செய்து கொள்கிறது. எனவே அதனை தொடர்ந்து தடையில்லாமல் கொடுக்க வேண்டும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை. இருப்பினும் தமிழக அரசு தமிழக மக்களுக்கு தேவைக்கேற்ப மின்சாரத்தை உற்பத்தி செய்ய தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தினுடைய சாமானியர்கள் முதல் கவர்னர் வரை பாதுகாப்பு தர வேண்டியது தமிழக அரசினுடைய கடமை. தமிழகத்தில் கொரோனா மீண்டும் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு ஆரம்பத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முதல் தவணை இரண்டாம் தவணை ஊசியை தங்கள் வீட்டு நலன் கருதி, நாட்டு நலன் கருதி நாட்டின் பொருளாதார நலன் கருதி உடனடியாக இந்த இரண்டு தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும் இன்று வரை எந்த ஒரு செயலையும் சரியாக செய்யவில்லை என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com