ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாக திமுக செயல்படுகிறது... மு க ஸ்டாலின் பெருமிதம்!!

மே 1 உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே தின பூங்காவில் மே தின நினைவு சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமாக இருக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் நாளான இன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் மே தின நினைவுச் சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், சி.வி கணேசன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர்கள் தினத்தன்று இங்கு வந்து மரியாதை செலுத்தி வருகிறோம்.

தொழிலார்களை வாழ வைக்கும் அரசாக திமுக ஆட்சி திகழ்கிறது. அண்ணா கலைஞர் ஆட்சிக்காலத்தில் ஏழை எளியவர்களுக்கு பாட்டாளி தோழர்களுக்காக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏழைகளுக்கு கண்ணொளி திட்டம் தொடங்கியது, விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம் கொடுத்ததும் திமுக, ஏழைகளுக்காக எவ்வளவோ திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

குடிசை மாற்று வாரியம் அமைத்தது திமுக. ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியம் அமைத்தது திமுக. ஏழைப் பெண்களுக்கு திருமண உதவி திட்டம் கொண்டு வந்தது, மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கியது, அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டம், மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்க்ஷாவை ஒளித்தது, பணி நேரத்தில் பகல் முழுவதும் நின்று கொண்டு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் நலனுக்காக அவர்களுக்கு நாற்காலி அமைக்க வேண்டும் என உத்தரவு போட்டோம், அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரம் திட்டம் தொடங்கப்பட்டது.

ஏழை எளிய மக்களுக்கான ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது. கலைஞர் செயல்பட்டது போல அவரது மகனான நானும் ஏழை எளிய மக்களுக்காக உழைத்து வருகிறேன், கட்டுமானத் தொழிலாளர்களுக்கான உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 1930 ஆம் ஆண்டு மே தினத்தை கொண்டாடியது தந்தை பெரியார். பெரியார் சோவியத் யூனியனுக்கு சென்று வந்த பிறகு மாஸ்கோ ரஷ்யா என பெயர் வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக கலைஞர் கருணாநிதி எனக்கு ஸ்டாலின் என பெயர் வைத்தார். 18 அமைப்பு சாரா தொழிலாளர் சங்கங்களில் உள்ள தொழிலாளர்களுக்கு 240 கோடி ரூபாய் செலவில் உதவிகள் செய்யப்பட உள்ளன. தொழிலாளர்களை போற்றுவோம்... தொழிலாளர்களின் ஒற்றுமையை ஓங்க செய்வோம், கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் கோரிக்கையின்படி மே தின பூங்காவை கருணாநிதி அமைத்துக் கொடுத்தார்.

பெரியார் வழியில் தான் எனக்கு கலைஞர் ஸ்டாலின் என்று பெயர் வைத்தார், பெரியார் மற்றும கலைஞர் வழியில் தொழிலளார்களை போற்றுவோம் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com