முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு... பொன்முடி மீது தொடர்ந்த வழக்கு ரத்து

பொன்முடி
பொன்முடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து விமர்சித்ததாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக திருவாரூரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக-வின் அப்போதைய எம்.எல்.ஏ. க.பொன்முடி, அப்போதை தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகவும், இந்திய இறையாண்மைக்கும், தேச ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக அதிமுக நகர செயலாளர் தட்சிணாமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் க. பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டு க.பொன்முடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, திருவாரூர் நகர காவல் நிலையத்தில் அமைச்சர் பொன்முடி மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com