கொரோனா கட்டுபாடுகள் விரைவில் முடிவுக்கு வரும்- அமைச்சர் மா.சு

கொரோனா கட்டுபாடுகள் விரைவில் முடிவுக்கு வரும்- அமைச்சர் மா.சு

ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதல்வர் தலைமையில் உயர் மட்ட குழு மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி தற்போது உள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கொள்வதற்கு ஆலோசனை நடத்த இருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அண்ணா சதுக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பர் திருவுருவ சிலைக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

தமிழக அரசு சார்பில் கம்பர் விழாவை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டதாக கூறிய அவர் கம்பர் தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் புலமை வாய்ந்தவர் எனவும் அவரின் கவி திறமையை உலகம் முழுக்கும் அறிவார்கள் என்றார்

தமிழகத்தில் ஏற்கனவே அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்திக் கொண்டு உள்ளது, பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் தற்போது தமிழகத்தில் இல்லை என்ற அவர், முதல்வர் தலைமையில் உயர் மட்ட குழு மீண்டும் ஒரு கூட்டம் நடத்தி தற்போது உள்ள ஓரிரு கட்டுப்பாடுகளையும் தளர்த்தி கொள்வதற்கு குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்தாலும் அண்டை மாநிலங்கள், நாடுகளில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது. நாம் இன்னும் முழு அளவில் தொற்றில் இருந்து மீண்டு வரவில்லை ஆனால் பொது மக்கள் தமிழக அரசின் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்தாமல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றார்.

தமிழகத்தில் 1.30 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி போடாமல் இருக்கிறார்கள், முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செய்துக்கொள்ளாமல் இருப்பவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்துக் கொள்ள வேண்டும் எனவும், வரும் சனிக்கிழமை 26 வது மெகா தடுப்பூசி முகாம் 50 அயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com