பஞ்சாப்பில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்

பஞ்சாப்பில் ஆட்சியை இழப்பதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3ல் இருந்து 2 ஆக குறைகிறது.
பஞ்சாப்பில் ஆட்சியை இழந்த காங்கிரஸ்

பல மூத்த தலைவர்கள் காங்கிரஸில் மாற்றத்தை கோரி தலைமைக்கு கடிதம் எழுதியதிலிருந்து கட்சி உள் கட்சி பூசலை அதிகம் எதிர்கொண்டுள்ளது.

முன்னாள் தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட 23 தலைவர்கள் அடங்கிய குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை காங்கிரஸ் தேர்தல் சரிவுக்கு எதிராக எச்சரித்து வந்த போதிலும் பயனில்லை.

சோனியா பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதோடு, ராகுல் காந்தி தொடர்ந்து கட்சித் தலைவரின் பணியை ஏற்றுக்கொள்வதற்கும் முன்னணியில் இருந்து வழிநடத்துவதற்கும் தயக்கம் காட்டுகிறார்.

இந்நிலையில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் இந்தியா முழுவதும் மிகவும் பரபரப்பாக உள்ளது. ஏனென்றால் இன்று காலை நடைபெற்ற 5 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் மத்தியில் ஆளும் பாஜக சட்டப்பேரவைத் தேர்தலிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அதன்படி உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய நான்கு மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்று தொடர்ந்து முன்னிலையில் பாஜக காணப்படுகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் புதிய ஆட்சி அமைய உள்ளது. ஏனென்றால் பஞ்சாபில் பாஜகவும் காங்கிரசும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஏனென்றால் பஞ்சாப்பில், டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது காணப்படுகிறது.

அதன்படி 117 தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் 90 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியினர் முன்னிலை வகித்து வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரசுக்கு இந்த தேர்தல் பெரும் ஏமாற்றமடைந்த காணப்படுகிறது.

அதிலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதன்படி பஞ்சாப்பில் ஆட்சியை இழப்பதால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எண்ணிக்கை மூன்றில் இருந்து இரண்டாக குறைந்துள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com