திராவிடத்தை எருமைமாட்டுடன் ஒப்பிடுவதா? சீமானுக்கு ஜெயக்குமார் கண்டனம்!!

திராவிடத்தை எருமைமாடு உடன் தொடர்பு படுத்தி சீமான் பேசியது திராவிடர்களை கொச்சைப்படுத்துவது போல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சிவந்தி ஆதித்தனாரின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், எருமைமாடு கூட கருப்பாக தான் இருக்கிறது, அதற்காக எருமைமாடு திராவிடர் ஆக முடியுமா என்று சீமான் பேசி இருப்பது திராவிடத்தை இழிவு படுத்துவது. பகுத்தறிவு உள்ளவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அரசியல் ரீதியாகக் கருத்து தெரிவிக்கலாம் ஆனால் எருமை மாடு கூட ஒப்பிட்டு பேசுவது, திரவிடத்தை கொச்சைப்படுத்துவது. அவருக்கு எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சர் எப்போது பார்த்தாலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவார்.

தேர்தலுக்கு முன் சொன்ன வாக்குறுதிகள் என்ன ஆயிற்று ? அனைத்துக்கட்சி, ஆளுநர் மீது பழியை போடுவதற்காகவே முதலமைச்சர் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுகிறார்.

மேலும், அரசியலமைப்பு சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதை தான் ஆளுநர் பின்பற்ற முடியும். அவருக்கு அழுத்தம் கொடுக்கலாம் ஆனால் புறக்கணிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com