தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமண விழாவில் முதல்வர்

சீர்திருத்த திருமணங்கள் இந்தியா முழுவதும் நடைபெறும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
தமிழச்சி தங்கபாண்டியன் வீட்டு திருமண விழாவில் முதல்வர்

சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் மகேந்திரன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் இல்லத் திருமண விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. திருமண விழாவில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் துர்கா ஸ்டாலின் மணமக்களுக்கு தாலி எடுத்து கொடுத்த மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..குடும்பத்தில் நடைபெறும் திருமணத்தை தலைமையேற்று நடத்தியதில் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், தற்போது தான் தமிழச்சி தங்கபாண்டியன் அப்போது அவர் பெயர் சுமதியாக இருந்தது என்றும், இளைஞர் மாநாட்டில் யார் யாரை அழைப்பது என்ற பட்டியலை முன்னாள் முதல்வர் கருணாநிதி தன்னிடம் வழங்கிய போது, கொடியேற்று விழாவில் சுமதியை அழைத்து பேச வையுங்கள் என கூறினார், அடுத்த நாள் அழைத்து சுமதி என வேண்டாம் தமிழச்சி தங்கபாண்டியன் என பெயரை மாற்றி விளம்பரம் கொடுக்க சொன்னார் என்றும் நினைவுகூர்ந்தார்.

மேலும், அவர் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார் என்பதால் அவரை அழைத்து கேட்டு விடு என கூறியதால், நான் அழைத்து இதுபோன்று நிகழ்ச்சியில் பேச வேண்டும் அதேபோன்று உங்கள் பெயரை கலைஞர் மாற்றியுள்ளார் என கூறியவுடன் உடனடியாக ஏற்றுக்கொண்டார் அப்படிதான் சுமதி தமிழச்சி தங்கபாண்டியனாக மாறினார் என்றும் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அவர், இனி வரும் உள்ளாட்சி, சட்டமன்ற ,நாடாளுமன்ற தேர்தலில் நாம் தான் வெற்றி பெறுவோம் அதில் எந்த ஒரு சந்தேகமும் வேண்டாம் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

இந்த சீர்திருத்த திருமணத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி எனவும், இதனை சீர்திருத்த திருமணம் என கூறுவதை விட திராவிட திருமணம் என கூறலாம் 1967ல் அண்ணா ஆட்சி அமைத்தவுடன் சட்ட திருத்தம் கொண்டு வந்தார் கலைஞர் இந்தியா முழுவதும் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்து இருந்தார் எனவே இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா முழுவதும் சீர்திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் வகையில் சட்ட திருத்ததை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com