எதிர்கட்சியே பாராட்டும் அளவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்... அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

எதிர்கட்சியினரை சேர்ந்த முன்னாள் அமைச்சரே பாராட்டும் அரசாக தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள இளங்கோ சாலையில் மாவட்ட செயலாளர் சிற்றரசு தலைமையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கழக அரசின் ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிய முதல் பணி ஆயிரம் விளக்காகும். தமிழக முழுவதும் அவரது சேவை நடைபெற முதல் விதை போட்ட இடம் ஆயிரம் விளக்கு பகுதியாகும். எதிர்கட்சி தேடி தேடி பார்த்தாலும் குறை கண்டு பிடிக்க முடியவில்லை. அனைவருக்குமான ஆட்சியாக திமுக ஆட்சி உள்ளது.

ஜீன் 3ம் தேதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் இனிமேல் அரசு விழாவாகும் என்பது நமக்கு எல்லாம் பெருமை தான். நாங்கள் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 60 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளோம். ஐந்து வருடங்களில் அனைத்தையும் நிறைவேற்றி தருவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் பேசினார்.

முதல்வரின் முகவரி திட்டம் மூலம் அமைச்சர்களாக இருக்கும் நாங்களே தவறு செய்திருந்தால் கூட நீங்கள் நேரடியாக முதல்வரிடம் தெரிவிக்கலாம். மேலும் சிங்காரசென்னை கனவுதிட்டம். தற்போதுசிங்காரச்சென்னை 2.0 திட்டத்தின்கீழ்பலதிட்டங்களைஅறிவித்துவருகிறார். முதியோர்ஓய்வூதியம்ஒவ்வொன்றையும்பார்த்துபார்த்துசெய்யும்முதலமைச்சரைபெற்றுள்ளோம்.

ஆயிரம் விளக்கு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 500 கோடியில் மேம்பாலம் தேனாம்பேட்டையில் அமைக்கப்படவுள்ளது. 120 கோடி ரூபாய் இலங்கை மக்களுக்கு வழங்கியுள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

ஆகையால் எதிர்கட்சியினரை சேர்ந்த முன்னாள் அமைச்சரே தொலைபேசியில் பேசுகையில் பாராட்டும் அரசாகவும், தமிழக முதலமைச்சர் செயல்படுகிறார். பாதுகாப்பான முதலீடு செய்யும் மாநிலமாக தமிழக செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com