ப.சிதம்பரத்தின் குரல் வலையை நசுக்கவே சிபிஐ சோதனை...

மத்திய அரசை விமர்சிப்பதால் ப.சிதம்பரத்தின் குரல் வலையை நசுக்க சிபிஐ சோதனை நடத்துவதாக எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை
எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை

சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட் தெருவில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் நடைபெறக்கூடிய சிபிஐ சோதனையை காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை நேரில் சென்று கேட்டறிந்தார்.

இதனையடுத்து வெளியே வந்த செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசிய போது, காலை 6 மணி முதல் ப. சிதம்பரம் வீட்டில் சிபி ஐ சோதனை நடத்தி வருவதாகவும், ஏற்கனவே சிபிஐ, ஐடி என பல ஏஜென்சிகள் தொடர்ந்து சோதனை நடத்தியதாக தெரிவித்தார்.

ஆனால் தொடர்ந்து சோதனை நடத்துவது எந்த அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கிறது என்பது தெரியவில்லை எனவும் ஏற்கனவே எல்லா வழக்குகளும் முடியும் நிலையில் உள்ளது. மூத்த வழக்கறிஞராக உள்ள பா. சிதம்பரம் முடித்து கொண்டிருக்கிறார் என தெரிவித்தார்.

சமீபத்தில் உதய்பூரில் நடந்த மாநாடு ஒன்றில் ப.சிதம்பரம் நாட்டின் அரசாங்கம் எப்படி செயல்படுகிறது, பொருளாதாரம் எந்தளவில் உள்ளது என்று விமர்சனம் செய்ததை பொருத்து கொள்ளாமல் சிபிஐ ஏவி சோதனை நடத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சோதனை பழிவாங்கும் நடவடிக்கை என கூறினார்.

மேலும் புகாரின் அடிப்படையில் சோதனை நடத்துவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், சோதனை செய்யலாம் தவறில்லை, மறுபடியும் மறுபடியும் சோதனை நடத்துவது எந்தளவிற்கு நியாயம் எனவும் அரசு பற்றி விமர்சிப்பதால் ப.சிதம்பரத்தின் குரல் வலையை நசுக்க சோதனை நடத்துவதாக அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com