அம்பேத்கர் புத்தகத்தை முதலில் வாங்கி படிங்க, அப்புறம் பிரதமர் மோடி வாழும் வீரராக இருக்காரானு சொல்லுங்க-காங். நிர்வாகி!

இளையராஜா அம்பேத்கர் புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு பின்னர் பிரதமர் மோடி வாழும் வீரராக இருக்கிறார் என்பதை ஒப்பிட்டுக் கூற வேண்டும் என காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் லெனின் பிரசாத் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் புத்தகத்தை முதலில் வாங்கி படிங்க, அப்புறம் பிரதமர் மோடி வாழும் வீரராக இருக்காரானு சொல்லுங்க-காங். நிர்வாகி!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேசிய மற்றும் மாநில அளவில் பேச்சாளர்களை தேர்ந்தெடுக்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இளைஞரணி மாநில தலைவர் லெனின் பிரசாத், இந்தப் பேச்சு போட்டியின் மூலமாக சட்டமன்றத்தில் பேச கூடிய அளவில் உருவாக்கி, சிறப்பாக பேசக் கூடிய ஒருவரை தேர்வு செய்து காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட உள்ளோம்.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு பேச்சாளர் என 234, மாவட்டத்திற்கு 2 பேச்சாளர்கள் என மாவட்டத்திற்கும் 78 பேச்சாளர்கள் என உருவாக்கப்படும். இதனுடைய முக்கிய குறிக்கோள் வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் விலை ஏற்றம் கண்டு இருக்கக்கூடிய பெட்ரோல் டீசல் விலை தொடர்பாக பொதுமக்களிடம் நேரடியாக பேசுவதற்கு இந்த பயிற்சி முகாம் உதவியாக இருக்கும்.

அம்பேத்கர் எழுதிய புத்தகத்தை படித்தால் பாஜகவில் ஒருவர் கூட உறுப்பினராக இருக்க மாட்டார்கள். இந்தியா முழுவதிலும் அம்பேத்கருடைய கொள்கைகளை பின்பற்ற கூடிய கட்சியாக காங்கிரஸ் மட்டுமே இருக்கிறது.

இளையராஜா முதலில் அம்பேத்கர் புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும் பிறகு பிரதமர் மோடி வாழும் வீரராக இருக்கிறார் என்பதை ஒப்பிட்டுக் கூற வேண்டும்.மத்திய அரசிடமிருந்து பெரிய விருதினை வாங்க இளையராஜா எதிர்பார்க்கிறார் என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com