விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உலக மகளிர் நாள் விழா மற்றும் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய விடுதலை சிறுத்தைகளுக்கு பாராட்டு விழா சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அஞ்சுகம் மண்டபத்தில் நடைபெற்றது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் , தேர்தல் களத்தில் உயிர் நீத்த பாப்பாப்பட்டி சுப்பன் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற துணை மேயர் பேரூராட்சி தலைவருக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார் .பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், நடைபெற்று முடிந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது என்பதை பலரும் பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மற்றும் ஆதரவாளர்கள் தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் அது ஒன்றும் பெரிய வெற்றி அல்ல என்றும்,பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றிருக்கிறது எனவும் ஏற்கனவே அவர்கள் ,உத்திரப்பிரதேசத்தில் பிஜேபி முன்பு வெற்றி பெற்றிருந்த தொகுதிகளை விட தற்போது வெற்றி பெற்ற எண்ணிக்கை சரிந்து இருக்கிறது ,எனவும் தெரிவித்தார் தொடந்து பேசிய அவர்,2024 ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இதேபோன்று நிலைப்பாட்டை எடுத்தால் தெரிந்தே வேண்டுமென்றே திட்டமிட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு வரவேற்பதற்காக செய்கிறார்கள் என்றுதான் கருதிக் கொண்டிருக்கும். உத்திரபிரதேசத்தில் நடந்திருப்பது அதுதான் என்றார். மேலும்,மறைமுக தேர்தல் நடைபெற்றது இந்த முறை மாற்றப் படவேண்டும் நேரடியாக மக்கள் ஊராட்சி மன்ற தலைவரை தேர்ந்தெடுப்பது போல ஒன்றியக் குழுவின் தலைவரை மாவட்ட குழு தலைவரை நகர மன்ற தலைவரை, மேயரை மக்களே வாக்களித்து தேர்ந்தெடுக்க கூடிய வகையில் சட்டம் திருத்தப்பட வேண்டும் அல்லது புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றார்.
தமிழகத்தில் சில இடங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள் கூட்டணி கட்சிகளால் கைப்பற்ற இயலாமல் போய்விட்டது. உடனடியாக திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் தம்முடைய திமுக போட்டி வேட்பாளர்களை பதவியை ராஜினாமா செய்யும்படி அறிக்கை வெளியிட்டது அரசியல் நாகரிகத்தின் ஒரு உச்சநிலை அதற்காக அவருடைய பண்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார பாராட்டும் என்றார்.