சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றதால் நாடு முழுவதும் பாஜக வெற்றி பெற்று விடும் என்பதல்ல; பாஜகவினரின் இந்தக் கூற்று ஏற்புடையது அல்ல என, தமிழகத்தில் வரும் 2024 பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறுவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றார்.
மேலும் கடந்த காலங்களில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்த வரலாறும் உண்டு என்ற அவர், நாடு முழுவதும் பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யும் மத்திய அரசு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது நியாயமல்ல என குற்றம் சாட்டினார்.
தொழிலாளர்களின் பி.எப் மீதான வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைப்பது நியாயமல்ல. தமிழக அரசு செலவிடும் பணம் முழுவதும் மக்களிடம் சென்று சேர வேண்டும் என முதல்வர் செயல்பட்டு வருகிறார்.மாநில அரசின் உரிமைகளில் கவர்னர் தலையிடக் கூடாது என்றார்.