பாஜக – விசிக இடையே மோதல்… போலீசார் உள்பட 8 பேர் படுகாயம்!!

BJP VCK
BJP VCK

சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் எட்டு பேர் காயமடைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அம்பேத்காரின் 132 ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

அவரை தொடர்ந்து பாஜகவினரும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த இருந்தனர். அப்போது பாஜகவினருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாஜக கட்சி கொடி கம்பங்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அகற்றியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நடைபெற்ற மோதலில் பாஜக, விசிக மற்றும் காவல்துறையினர் 2 பேர் உள்பட 8 பேர் கல்வீச்சு தாக்குதலில் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com