1 ரூபாய் சம்பளம் பெற்று சினிமாவில் நடித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை !!
வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வெற்றிப் பெற்றுள்ளது. அந்த வகையில் கன்னட மொழியில் உருவாகி வரும் படம் 'அரபி'. இப்படம் தன்னுடைய இரண்டு கைகளையும் இழந்த நிலையிலும் விடாமுயற்சியினால் சர்வதேச அளவில் நீச்சலில் சாதனை படைத்த பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷின் வாழ்க்கையை கருபொருளாக வைத்து உருவாகி வருகிறது. இப்படத்தை பிரபல கன்னட இயக்குனர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை ஸ்ரீவிஜய ராகவேந்திரா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் தமிழ்நாடு பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை, விஸ்வாஷின் நீச்சல் பயிற்சியாளராக நடித்துள்ளார். இப்படத்திற்காக இயக்குனர் ராஜ்குமார், அண்ணாமலையை அனுகியபோது படத்தின் கதை கேட்டு பிடித்து போன அண்ணாமலை இதில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு, சம்பளமாக ரூ.1 பெற்றுக் கொண்டு நடித்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 'அரபி' படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து படக்குழு தனது சமூக வலைத்தளத்தில், முன்னாள் போலீஸ் அதிகாரி அண்ணாமலை மற்றும் பாரா நீச்சல் வீரர் விஸ்வாஷ் கே.எஸ்ஸை முதன் முதலாக திரையில் பார்க்க ஒரு வாய்ப்பு என்று குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.