சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் பிறந்த கட்கர் காலான் கிராமத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பும் செய்து வைத்தார். அவருடன் 16 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இந்தநிலையில், பதவியேற்புக்கு பின் மேடையில் பேசிய அவர், தனக்கு வாக்களிக்காத பஞ்சாப் மக்களுக்கும் தான் முதல்வர் என்பதை குறிப்பிட்டு பேசினார். மேலும் தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடமாட்டேன் என உறுதி கூறிய அவர், வேலை வாய்ப்பின்மை, விவசாயம் உள்ளிட்ட அத்தனை பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன் என்றும், மக்களின் ஆதரவுடன் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் கட்டுவேன் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பகவந்த் மான் கோரிக்கைக்கு ஏற்ப பலரும் மஞ்சள் நிற டர்பன் அணிந்து வந்திருந்தனர்.