ஆந்திராவில் கடந்த 2014ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியின்போது அமராவதியில் இருந்து சித்தூர் வரை ரிங் ரோடு அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். ரிங் ரோடு அமைப்பதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படும் எனவும் அதற்கான வரைபடம் தயார் செய்யப்பட்டது.
ரிங் ரோடு அமைப்பதால் ஏராளமான நகரங்களில் உள்ள வீடுகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ரிங்ரோடு அமைப்பதற்கான வரைபடத்தை அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபுநாயுடு மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆந்திரா 2ஆக பிரிக்கப்பட்டது. அமராவதி தலைமையிடமாக கொண்டு ஆந்திரா செயல்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. அமராவதியில் தலைமைச் செயலகம் அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் ஆந்திர மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பதவியேற்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவில் 3 இடங்களில் தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும் அமராவதியிலிருந்து சித்தூர் வரை அமைக்கப்பட இருந்த ரிங்ரோடு திட்டத்தையும் ரத்து செய்தார்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 27ந்தேதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மங்களகிரி எம்.எல்.ஏ ராமகிருஷ்ணா சிஐடி போலீசில் புகார் அளித்தார்.
அதில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் அமராவதியில் இருந்து சித்தூர் வரை ரிங்ரோடு அமைக்க தயாரிக்கப்பட்ட வரைபடத்தை சந்திரபாபு நாயுடு முறைகேடாக மாற்றி அமைத்து ஆதாயம் பெற்றதாக புகார் செய்திருந்தார்.
இதுகுறித்து ஆந்திர மாநில சி.ஐ.டி போலீசார் சந்திரபாபு நாயுடு மீது வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பினர். அமராவதி சம்பந்தமாக என் மீது 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
. இதுவரை எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. அதேபோல் அமராவதி சித்தூர் ரிங்ரோடு திட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் என் மீது திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.