அண்ணாமலை கூறிய கருத்து அவதூறானது... துரை வைகோ

பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் அரசியல் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறிய கருத்து அவதூறானது என மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ கண்டனம்.
அண்ணாமலை கூறிய கருத்து அவதூறானது... துரை வைகோ

சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான "தாயகத்தில்" மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோவின் அலுவலகத்தை, இந்தியக் கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லகண்ணு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, தமிழகத்துகுறிய தேவைகளை தான் முதல்வர் நேற்று பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் பேசி உள்ளார்.

இலங்கை இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் கச்ச தீவை மீட்க வேண்டியதை சுட்டி காட்டி உள்ளார். பிரதமர் நிகழ்ச்சியில் முதல்வர் அரசியல் பேசி உள்ளதாக அண்ணாமலை கூறிய கருத்து அவதூறானது என கண்டனம் தெரிவித்த அவர், தமிழகத்துகுறிய தேவைகளை தான் முதல்வர் நேற்று பிரதமர் கலந்து கொண்ட நிகழ்வில் பேசி உள்ளார். இலங்கை இந்தியாவை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சூழலில் கச்ச தீவை மீட்க வேண்டியதை சுட்டி காட்டி உள்ளார்.

10 வருடங்களாக நிலுவையில் இருந்த மதுரவாயல் பாலம், சென்னை - பெங்களூர் விரைவுச்சாலை என 31 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்க வருகை தந்ததால் எதிர்க்கவில்லை. கடந்த காலங்களில் நீட் போன்ற பிரச்சனைகளில் மாணவர்கள் உயிரிழந்ததால் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டினோம். நீட், பெட்ரோல் டீசல் விலை போன்ற பிரச்சினைகளில் இன்றும் ஒன்றிய அரசை எதிர்க்கிறோம் என விளக்கமளித்தார்.

கடந்த ஆட்சியில் சாத்தான்குளம், பொள்ளாச்சி சம்பவம் போன்ற பிரச்சினைகளில் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போதைய ஆட்சியில் பிரச்சனையில் தவறுகள் ஏற்பட்டால் காவல்துறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என துரை வைகோ கூறினார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com