தமிழகம் வந்தார் அமித்ஷா... பாஜக தலைவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்பு!!

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமீத்ஷாவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
அமித்ஷா
அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சா் அமீத்ஷா புதுச்சேரி மாநிலத்திற்கு செல்லும் வழியில், பீஹாா் மாநிலம் பாட்னாவிலிருந்து நேற்று இரவு 7 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு இரவு 9.38 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்தாா்.

சென்னை விமான நிலையத்தில் உள்துறை அமைச்சரை தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன், பாஜக மூத்த தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், H.ராஜா, சிடி ரவி, உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் வரவேற்றனா்.

அதன் பின்னர் இரவு 9.45 மணிக்கு அமீத்ஷா சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வண்டலூர் மிஞ்சூா் அவுட்டர் ரிங் ரோடு வழியாக ஆவடிக்கு புறப்பட்டு சென்றாா். இதையடுத்து சென்னை விமான நிலையத்திலும் அவர் செல்லும் வழியில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு செய்யப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com