சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள சாலிகிராமம், கே.கே.நகரில் உள்ள கிளை நூலகங்களில் அனைத்து வசதிகளும் இருப்பதாகவும், தேவைப்படும் பட்சத்தில் உரிய கருத்துரு பெற்று கிளை நூலகங்களை நவீனப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
மேலும், நடப்பு ஆண்டிலேயே 4,650 நூலகங்லளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறிய அவர், சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் பணிகள் தொடங்கும் என்றும் உறுதியளித்தார்..
அதேப்போல், தமிழகத்தில் 32 மாவட்ட மைய நூலகங்கள் இருப்பதாகவும், இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்களிலும் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மைய நூலகங்கள் அமைப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாகவும், 100 ஆண்டுகள் கடந்து சிதிலமடைந்துள்ள நூலகங்களை, அதன் பெருமை மாறாமல் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்