
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதனை கண்டித்து அதிபர் ராஜபக்ஷே வீட்டை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைகட்டுப்படுத்த நேற்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் உள்ள பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கும் இடமளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஊரடங்கை மீறி செயற்பட முறன்றசிலர், போலீசாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டு திருப்பியனுப்பட்டனர்.
மலையக நகர் பகுதியில் ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் வேலைக்கு சென்றனர். இதேபோன்று தோட்ட தொழிலாளர்கள் வேலைக்குச்சென்றனர். இதற்கிடையே ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.