எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் அரசுப்பணியில் சேர முடியாது

சென்னை பசுமைவழிச்சாலையில், குழந்தைகள் மத்தியில் இருக்கும் தூரப் பார்வை குறைபாட்டு நாளை முன்னிட்டு விழிப்புணர்வு காணொளியை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளியிட்டார்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் அரசுப்பணியில் சேர முடியாது

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், உக்ரைனிலிருந்து வந்துள்ள மாணவர்களின் மேற்படிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. மத்திய சுகாரத்துறை அமைச்சரை சந்தித்த பின் மாணவர்களின் மேற்படிப்பு குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார். மேலும் அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள் ஒரு வருடத்திற்கு என ஒப்பந்த அடிப்படையில் அவசர கதியில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற அவர், அரசு பணியில் சேரும் பொழுது முறையாக சேர வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்றெல்லாம் அரசுப்பணியில் சேர முடியாது. எனினும் மனிதாபமான அடிப்படையில் அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு அம்மா மினி கிளினிக் பணியாளர்கள் குறித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இன்னும் மூன்று மாதங்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது தேவையாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைவாக இருந்த பொழுதிலும் அண்டை மாநிலங்களில் சற்று கூடுதலாக இருப்பதால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொதுவெளியில் முக கவசம் அணிவது சமூக இடைவெளி பின்பற்றுவது குறித்து அபராதம் வசூலிக்க படாமல் உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மக்கள் தாங்களாகவே முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவதை கடைபிடிக்கவேண்டுமே தவிர அபராதம் வசூலிப்பதற்காக அவ்வாறு செயல்படக்கூடாது என்றார்.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com