6 அடியிலிருந்து 282 அடியாக மாறிய விநோதம் : : ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகும் ராட்சத குழி !!

ரஷியாவில் உள்ள சைபீரியாவில் தரையில் தோன்றிய மிகப்பெரிய குழி ஒன்று மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
6 அடியிலிருந்து 282 அடியாக மாறிய விநோதம் : : ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகும் ராட்சத குழி !!

ஒவ்வொரு வருடமும் இந்த குழியின் ஆழம் அதிகரித்துக்கொண்டே சென்றுள்ளது. 1980ம் ஆண்டு இந்த குழி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாலும், முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது இதன் ஆழம் 6 அடி கூட இல்லை. ஆனால் கடந்த வாரம் இந்த குழியை மீண்டும் அளந்து உள்ளனர். அப்போது குழியின் ஆழம் 282 அடி என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு குழியின் அகலம் 1 கிலோ மீட்டர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த குழி கடந்த 40 வருடங்களில் தினமும் பெரிதாகிக்கொண்டே சென்று தற்போது ராட்சச குழியாக உருவெடுத்துள்ளது. இதனால்தான் அப்பகுதி மக்கள் இந்த குழியை பூமிக்கு உள்ளே இருக்கும் இன்னொரு உலகத்திற்கான பாதை என்று கூறி வருகிறார்கள். இந்த குழியில் கீழே செல்ல செல்ல பூமியின் பழைய அடுக்குகள் தெரிய தொடங்கி உள்ளன. ஒவ்வொரு வருடமும் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு பெரிதாகிக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.

அதன்படி பாதி தூரத்திலேயே 2 லட்சம் வருடம் பழைய பூமியின் மண் அடுக்குகள் இங்கு கண்டுடிபிடிக்கப்பட்டு இருக்கின்றன. முழு ஆழத்திற்கு சென்றால், அதாவது 282 அடிக்கு கீழே சென்றால் அங்கு இருக்கும் மண் அடுக்கு, 6.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது பூமி 6.5 லட்சம் வருடத்திற்கு எப்படி இருந்தது, மண் எப்படி இருந்தது என்ற ரகசியத்தை தெரிவிக்கும் வகையில் இந்த குழி ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com