அமெரிக்காவில் இந்திய நிதியமைச்சருடன் இலங்கை நிதியமைச்சர் சந்திப்பு

அமெரிக்காவில் இந்திய நிதியமைச்சருடன் இலங்கை நிதியமைச்சர் சந்திப்பு

பன்னாட்டு நிதியத்தின் (FMF) ஆலோசனை கூட்டம், உலக வங்கியின் உயர் நிலைக் கூட்டம், ஜி20 உறுப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் (FMCPG) கூட்டங்களில் கலந்து கொள்ள அமெரிக்க சென்றுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்த பயணத்தின் போது இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் நிதியமைச்சர்கள் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும் நடத்துகிறார். அதன்படி, வாஷிங்டனில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதரமனுடன் இலங்கையின் புதிய நிதியமைச்சர் அலி சப்ரி சந்தித்து பேசினார்.

சமீபத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது இலங்கை நிதியமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷே ராஜினாமா செய்ததை தொடர்ந்து அலி சப்ரி நிதியமைச்சராக பதவியேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இலங்கையில் உள்ள பொருளாதார நெருக்கடையில் சமீபத்திய நிலை குறித்து அலி சப்ரி எடுத்துரைத்துள்ளார். அதேபோல், இந்தியாவின் உதவிக்கும் நன்றி தெரிவித்த அவர் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது.

இவை தவிர பன்னாட்டு நிதி கோருதல், அண்டை நாடுகளின் ஒத்துழைப்பு கோருதல் தொடர்பாகவும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது பேசப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
logo
vnews27
www.vnews27.com